மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பிரசாதம் தயாரிப்பதற்காக ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை எரிபொருள் தயாரிக்க வழங்குவதற்கான திட்டம் (RUCO) முதல்முறையாக தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்படி நேற்று(ஜூலை 26) மட்டும் கோவிலில் பயன்படுத்தப்பட்ட 600 லிட்டர் எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கோவில் நிர்வாகம் ஒப்படைத்தது. இந்த எண்ணெய் பயோடீசலாக மாற்றம் செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.
மதுரையில் இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே பயன்படுத்தபட்ட எண்ணெய் சுமார் 75 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் எரிபொருளாக மாற்றப்பட்டவுள்ளதாக என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?