ETV Bharat / city

வெள்ளையர்கள் உறங்கும் கல்லறை தோட்டம் மதுரையில்...

author img

By

Published : Oct 25, 2020, 4:20 PM IST

'இங்கு பலர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றனர்' - இப்படித்தான் கல்லறை தோட்டங்கள் பெரும்பாலும் வர்ணிக்கப்படுகின்றன. ஆனால், இந்த வர்ணிப்பை தாண்டி பல்லாண்டு கால வரலாற்றையும் தாங்கி நிற்கிறது மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டம்.

வெள்ளையராட்சியின் வரலாற்றைச் சுமக்கும் கல்லறைத் தோட்டம் - சிறப்புத் தொகுப்பு

கி.பி 1700-களில் வணிகத்திற்காக இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த ஐரோப்பியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக, இந்தியா முழுமையையும் தங்கள் காலடிக்குள் கொண்டு வந்தார்கள். இவர்களை தமிழ்நாட்டிலும் மன்னர்கள் பலர் எதிர்த்தாலும், துப்பாக்கி, பீரங்கிகளின் முன்னே அவர்களின் அப்பழுக்கற்ற வீரம், சோரம் போனதுதான் மிச்சம். அக்காலகட்டத்தில் மதுரை என்பது இன்றைய திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தற்போதைய மதுரை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டு விரிந்து பரவியிருந்தது.

இங்கு வெள்ளை ஆட்சியாளர்கள் பலர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோரின் கல்லறைகள் இங்குதான் உள்ளன. மதுரை சந்திப்புக்கு சற்று எதிரே வடக்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் அமைந்துள்ள இந்தக் கல்லறைகள், ஐரோப்பிய-அமெரிக்கர்கள் கல்லறைத் தோட்டம் என்ற தனியார் அமைப்பு ஒன்றின் வாயிலாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சற்றேறக்குறைய 500க்கும் மேற்பட்ட கல்லறைகள் உள்ளன. அவற்றுள் ஏறக்குறைய 95 விழுக்காடு 1947-க்கு முற்பட்டவையாகும்.

வெள்ளையர்கள் உறங்கும் கல்லறை தோட்டம் மதுரையில்...
இந்த வர்ணிப்பை தாண்டி பல்லாண்டு கால வரலாற்றையும் தாங்கி நிற்கும் கல்லறைத் தோட்டம்

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ராஜா கூறுகையில், "இங்குள்ள கல்லறைக்கும் கட்டபொம்மனுக்கும் தொடர்பு உள்ளது. பாஞ்சாலங்குறிச்சி மீது வரி கேட்டு முதலில் போர் தொடுத்தவரும், கட்டபொம்மன் பிடிபட்ட பின்னர் அவருக்கு மேஜர் பானர்மேனால் தூக்குத் தண்டனை விதித்தபோது, அதனை நிறைவேற்றும் அலுவலராக இருந்தவருமான ஆலன்துரையின் கல்லறை இங்குதான் உள்ளது' என்கிறார்.

மகாத்மாவின் நினைவுகளை இன்றும் சுமக்கும் மதுரை!

1733ஆம் ஆண்டு மே மாதம் சாமுவேல் இவான்ஸ் என்ற ஐரோப்பியரின் கல்லறைதான், முதன் முதலாக இந்தக் கல்லறைத் தோட்டத்தில் கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டது. தற்போதைய கரோனா போன்று கொள்ளை நோயாக அறியப்பட்ட காலரா, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் மதுரையில் மிகத் தீவிரமாக பரவியது. அக்காலகட்டத்தில் இந்த நோயால் வெள்ளையர்கள் குடும்பத்தினர் பலர் உயிரிழந்தனர். அப்போது அவர்கள் அந்தக் கல்லறைகளெல்லாம் இன்றைக்கும் அந்த சோக வரலாற்றைக் கூறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் மிகுந்த வேதனை.

கட்டபொம்மனின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய அலுவலர் ஆலன்துரையின் கல்லறை

மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருதுபாண்டியன் கூறுகையில், "1800-களில் மதுரையில் பரவிய காலரா நோயின் சோக சாட்சியாக இந்தக் கல்லறைகள் விளங்குகின்றன. பிரிட்டீசாரின் படைப்பிரிவில் சம்பளம் வழங்குவதற்கென்று நியமிக்கப்பட்ட அலுவலரான 'பே மாஸ்டர் ஜெனரல்' ஒருவரின் கல்லறை இங்குள்ளது. ராணுவ தளபதிகளின் கல்லறைகளும் இங்கே காணக்கிடைக்கின்றன. மதுரை, திண்டுக்கல் முன்சீப் கோர்ட்டுகளில் பணியாற்றிய அலுவலர்களின் கல்லறைகளும் உள்ளன. இந்தக் கல்லறைகள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் பல வரலாற்றுத் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு" என்கிறார்.

முதன் முதலாக உருவாக்கப்பட்ட சாமுவேல் இவான்ஸ் என்பவரின் கல்லறை

இங்குள்ள ஒவ்வொரு கல்லறையும் ஏதோ ஒரு செய்தியை நம்மிடம் பகிர்வதைப் போன்றே உள்ளது. வரலாறு என்பது வாழ்கின்ற நபர்களிடம் மட்டுமன்றி, வாழ்ந்து மறைந்தவர்களிடமும் உண்டு என்பதற்கு, இங்குள்ள கல்லறைகளும் சாட்சி...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.