ETV Bharat / city

சரக்கு ரயில் போக்குவரத்து - மதுரை கோட்டத்தில் 35% அதிகரிப்பு - மதுரை வர்த்தக வளர்ச்சி குழு

மதுரை கோட்டத்தில் நடைபெறும் சரக்கு ரயில் போக்குவரத்தில் முதல் காலாண்டில் மட்டும் 35 விழுக்காடாக ரூ.78.54 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

மதுரை கோட்டம்
மதுரை கோட்டம்
author img

By

Published : Jul 10, 2022, 7:32 PM IST

மதுரை கோட்டத்திற்குட்பட்ட தெற்கு ரயில்வேயின் சரக்கு ரயில் போக்குவரத்து மூலமாக, இந்த 2022 நிதியாண்டின் 3 மாதங்களுக்குள் எவ்வளவு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மதுரை தெற்கு ரயில்வே சார்பாக நேற்று (ஜூலை 9) செய்திக்குறிப்பு வெளியிடப்படுள்ளது.

அதில், '2022-23 நிதியாண்டின் முதல் காலண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மதுரை கோட்டம் தனது சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூ.78.54 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 35.04 % அதிகமாகும். மேலும் ரயில்வே வாரியம் நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் 33.14 % அதிகமாகும்.

இந்த காலாண்டில் 7.16 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. விவசாய உரம் 3.26 லட்சம் டன், சுண்ணாம்புக்கல் 1.04 லட்சம் டன், டிராக்டர்கள் 0.70 லட்சம் டன், நிலக்கரி 0.55 லட்சம் டன், மரக்கரி மற்றும் சரளை கற்கள் தலா 0.34 லட்சம் டன், ஜிப்சம் மற்றும் சோயா பீன்ஸ் தலா 0.08 லட்சம் டன், ரயில்வே துறை பொருட்கள் 0.76 லட்சம் டன் சரக்கு ரயில்கள் மூலம் இந்த காலாண்டில் அனுப்பப்பட்டன.

மதுரை கோட்டத்தில் செயல்பட்டு வரும் வர்த்தக வளர்ச்சி குழுவின் தொடர் முயற்சியால் புதிய புதிய பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. அவை கட்டுமானத்திற்கான சரளை கற்கள், உணவுப் பொருள் தயாரிப்பிற்கான சோயா பீன்ஸ், வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மரக்கரி, தென்மேற்கு ராஜஸ்தான் பகுதிக்கு அனுப்பப்படும் டிராக்டர்கள், சிமெண்ட் தயாரிப்பிற்கு பயன்படும் சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்ஸம் ஆகியவை ஆகும்.

இவை இந்த காலாண்டில் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு ரூ.25.63 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய உபயோகத்திற்கான உரம் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு ரூ.42.24 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 % அதிகம். ரயில்வே வாரிய இலக்கை விட 30.34 % அதிகம்.

தெற்கு ரயில்வே அளவில் சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூ.922 கோடி ஈட்டப்பட்டுள்ளது‌. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36 % அதிகம். கடந்த ஜூன் மாதம் மட்டும் தெற்கு ரயில்வே 3.114 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 53 % அதிகம் ஆகும்' என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.