மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை இயங்கி வருகிறது.
தற்போதுவரை 113 பேர் இங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 54 பேர் இதுவரை குணமடைந்த நிலையில், இன்று மேலும் 23 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பினர்.
இவர்களில் 6 பெண்கள், 13 ஆண்கள், இரண்டு சிறுவர்கள், இரண்டு சிறுமியர்கள் அடங்குவர். இவர்களில் 16 பேர் மதுரையையும், 7 பேர் விருதுநகரையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதையும் படிங்க: "மாமதுரை அன்னவாசலில்" மே 10 முதல் முட்டையுடன் மதிய உணவு - சு.வெங்கடேசன் எம் பி!