தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, தர்மபுரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இன்று +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி, அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் தலைமையில் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொள்ள பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.
இதனிடையே கற்றல் குறைபாடு, மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், கண் பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர், கழிவறை, தடையில்லா மின்சாரம் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
மே 5ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையிலும் தடையில்லா பேருந்து சேவை வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Tamilnadu School Public Exams on May:மே மாதத்தில் பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்