ETV Bharat / city

பயணிகள் குறைவால் ரயில் சேவைகள் ரத்து - தெற்கு ரயில்வே! - Train passengers

பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து மேலும் 10 ரயில் சேவைகள் ஜூன் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Southern Railway
தெற்கு ரயில்வே
author img

By

Published : May 28, 2021, 9:43 AM IST

மதுரை: தென் மாவட்டங்களில் இயக்கப்படும் மேலும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்று காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இயக்கப்படும் மேலும் சில ரயில்கள் ஜூன் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஜூன் 2 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் ஜூன் 3 முதல் ஜூன் 15 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06066 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், ஜூன் 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02627 திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி சிறப்பு ரயில் மற்றும் ஜூன் 2 முதல் ஜூன் 16ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02628 திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ஜூன் 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மற்றும் ஜூன் 2 முதல் ஜூன் 16ஆம் தேதி வரை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

தொடர்ந்து, ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06729 மதுரை - புனலூர் சிறப்பு ரயில் மற்றும் ஜூன் 2 முதல் ஜூன் 16 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு ரயில் ஆகியவை திருவனந்தபுரம் - புனலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06127 சென்னை எழும்பூர் - குருவாயூர் சிறப்பு ரயில் மற்றும் ஜூன் 2 முதல் ஜூன் 16ஆம் தேதி வரை குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06128 குருவாயூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை திருவனந்தபுரம் - குருவாயூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி: அரசு அலுவலர்களின் ஒரு நாள் ஊதியம் ஏற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.