மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தீவிர பரவலின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆனாலும் இதனை மீறும் வகையில் ஆங்காங்கே இளைஞர்களும், பொதுமக்களும் வெளியே வரத்தான் செய்கின்றனர்.
இதனால் மதுரை மாநகர காவல் ஆணையர் இதுபோன்று வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகரில் 25 காவல் நிலையங்கள் உள்ளன. இவை மதுரை டவுன், திருப்பரங்குன்றம், திலகர் திடல், தல்லாகுளம், அண்ணாநகர் ஆகியவை ஐந்து உதவி ஆணையர்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மதுரை டவுன் காவல் உதவி ஆணையர் மண்டலத்தில் விளக்குத்தூண், தெப்பக்குளம், தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம், ஆகிய நான்கு காவல் நிலையங்கள் உள்ளன.
அந்த வகையில், ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக தெப்பக்குளத்தில் நான்கு வழக்குகளும், ஜெய்ஹிந்த்புரத்தில் மூன்று வழக்குகளும் பதிவாகி உள்ளன. திருப்பரங்குன்றம் மண்டலத்தில் கீரைத்துறை, அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகர் ஆகிய நான்கு காவல் நிலையங்கள் உள்ளன. கீரைத்துறை காவல் நிலையத்தில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதே போல திருப்பரங்குன்றத்தில் ஒன்பது வழக்குகளும், அவனியாபுரத்தில் ஆறு வழக்குகளும் பதிவாகி உள்ளன. திலகர் திடல் மண்டலத்தில் திடீர்நகர், சுப்பிரமணியபுரம், எஸ் எஸ் காலனி, திலகர் திடல் ஆகிய நான்கு காவல் நிலையங்கள் உள்ளன.
சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக மூன்று வழக்குகளும், திடீர்நகரில் இரு வழக்குகளும், எஸ். எஸ். காலனியில் ஒரு வழக்கும், திலகர் திடலில் 18 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
தல்லாகுளத்தில் மண்டலத்தில் தல்லாகுளம், செல்லூர், கூடல் நகர் ஆகிய மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக நான்கு வழக்குகளும், செல்லூரில் ஐந்து வழக்குகளும், கூடல் புதூரில் நான்கு வழக்குகளும் பதிவாகி உள்ளன.
அண்ணாநகர் மண்டலத்தில் கே புதூர், மதிச்சியம், அண்ணாநகர் ஆகிய மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. கே புதூர் காவல்நிலையத்தில் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக எட்டு வழக்குகளும், மதிச்சியத்தில் இரு வழக்குகளும், அண்ணாநகரில் ஏழு வழக்குகளும் பதிவாகி உள்ளன.
மதுரை மாநகரில் நேற்று மட்டும் ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக 79 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 88 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து 93 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மதுரை மாநகரை பொறுத்தவரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் நேற்று (மே2) வரை ஊரடங்கு சட்டத்தை மீறியதாக ஏழு ஆயிரத்து 761 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக எட்டு ஆயிரத்து 459 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 4 ஆயிரத்து 445 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக 513 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்த 240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஒட்டுமொத்தமாக மதுரை மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு தடை சட்டத்தை மீறியதாக பத்து ஆயிரத்து 830 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 14 ஆயிரத்து 490 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஐந்து ஆயிரத்து 676 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: மதுரையில் ஊரடங்கை மீறிய 532 பேர் கைது!