கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் - அன்னம்மாள் ஆகிய வயதாக தம்பதி, பைக்கில் ஈரோடு சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஈரோடு நோக்கி வாழைக்காய் பாரம் ஏற்றி வந்த மினி சரக்கு வாகனம், எதிர் பாராத விதமாக வயதான தம்பதி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதே நேரத்தில் எதிரே கோபி நோக்கி பைக்கில் வந்த நித்தியானந்தன் மீதும் சரக்கு வாகனம் மோதிவிட்டு அருகில் இருந்த சாரையோர பள்ளத்தில் இறங்கியது.
இதில், பிளகாட்டு தோட்டத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் நித்தியானந்தன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வயதான தம்பதியை மீட்டு அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு வந்த கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர், உயிரிழந்த நித்தியானந்தனின் உடலை கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். வாழைக்காய் பாரம் ஏற்றி வந்த மினி சரக்கு வாகன ஓட்டுநர் குமார் தப்பியோடியதால் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கந்துவட்டிக் கொடுமை: தனக்குத்தானே தீவைத்துக் கொண்ட கோழிக் கடைக்காரர்