ETV Bharat / city

புனித் ராஜ்குமார் மறைவு: பீரேஸ்வரர் கோயில் சாணியடி திருவிழாவில் மரியாதை - பீரேஸ்வரர் கோயில்

கோயில் திருப்பணிக்கு நன்கொடை வழங்கிய மறைந்த கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு சாணியடி திருவிழாவில் பக்தர்களால் மரியாதை செலுத்தப்பட்டது.

cow dung festival, erode cow dung festival, actor punith rajkumar, புனித் ராஜ்குமார், புனித் ராஜ்குமாருக்கு மரியாதை, சாணியடி திருவிழா, தாளவாடி, குமிட்டாபுரம், பீரேஸ்வரர் கோயில்
புனித் ராஜ்குமார் மறைவு
author img

By

Published : Nov 7, 2021, 10:20 AM IST

ஈரோடு: மாரடைப்பு ஏற்பட்டு சில நாட்களுக்கு முன் மரணமடைந்த கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு கோயில் திருவிழாவில் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையில் தாளவாடி தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமார். இவரது மகன் புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

பீரேஸ்வரர் கோயில் சாணியடி திருவிழாவில் புனித் ராஜ்குமாருக்கு மரியாதை

சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், குமிட்டாபுரத்தில் நடைபெற்ற பீரேஸ்வரர் சாணியடி திருவிழாவில், தந்தையுடன் மகன் புனித் ராஜ்குமார் கண்ணாம்பூச்சி விளையாடும் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த புனித் படத்தை ரசிகர்கள் தலையில் சுமந்தபடி சாணத்தை சுற்றிவந்து மரியாதை செலுத்தினர். இக்கோயில் திருப்பணிக்கு புனித் ராஜ்குமார் நன்கொடை வழங்கியதைப் போற்றும் விதமாக, இந்த திருவிழாவில் புனித்தை அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கோவர்தன் பூஜை: 8 முறை சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.