ETV Bharat / city

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு: வனச்சரக அலுவலர் பணியிடைநீக்கம் - ஈரோடு மாவட்டத்தில் யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வனஅலுவலர்ல சஸ்பெண்ட்

ஈரோடு: கரும்பு தோட்டத்து மின்வேலியில் சிக்கி இரு யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜீரஹள்ளி வனச்சரக அலுவலரை மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Wildlife officer suspended over the deaths of elephants

author img

By

Published : Mar 1, 2020, 9:39 AM IST

ஈரோடு மாவட்டம் ஆசனூர் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி வனச்சரகத்திலுள்ள கரளவாடியைச் சேர்ந்த கருப்புச்சாமி என்பவரது கரும்புத்தோட்டத்தில் புகுந்த இரு யானைகள் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.

இதையடுத்து விவசாயி கருப்புச்சாமி தலைமறைவானார். இது குறித்து ஜீரஹள்ளி வனச்சரக அலுவலர் காண்டியப்பன் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது.
இந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் உத்தரவிட்டார்.
ஜீரஹள்ளி வனச்சரகத்தில் இரு யானைகள் உயிரிழப்பு

இதேபோல் வனவர் முனுசாமி, வனக்காவலர் ராஜன்னா ஆகியோர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல வனப்பாதுகாவலர் நாகநாதன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : 'ரஜினி அனைத்தும் அறிந்தவர்; அவர் ஒரு லெஜெண்ட்'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.