கரோனா முழு ஊரடங்கின் காரணமாக, பசியோடு சாலைகளின் ஓரம் ஏக்கத்துடன் காத்திருக்கும் கைவிடப்பட்டவர்களுக்கு உணர்வுகள் என்ற அமைப்பு உணவு அளிப்பதை 17ஆவது நாளாக தொடர்ந்து செய்து வருகின்றது.
இதுகுறித்து உணர்வுகள் அமைப்பின் தலைவர் ராஜன் கூறுகையில், "உணர்வுகள் என்ற அமைப்பில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்கள் மூலம் தினமும் தக்காளி சாதம், காய்கறி சாதம், முட்டையுடன் கூடிய உணவினை தினமும் 500 பேருக்கும் மேல் அளித்து வருகிறோம். சுகாதாரமான முறையில் ஏழை, எளிய ஆதரவற்ற முதியோர்களுக்கு முழு ஊரடங்கு காலத்தில் பல இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் இதனை சாதித்து வருகிறோம்.
எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் உதவும் பணத்தைக் கொண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து உணவு வழங்கி வருகின்றோம். நாங்கள் செய்வதைப் பார்த்து பல இளைஞர்கள் இதேபோல் செய்வதற்கு முன்வர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தக் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
அரசு மருத்துவமனை, ரவுண்டானா ரயில்வே ஸ்டேஷன், பேருந்து நிலையம், வ.உ.சி பூங்கா, காளைமாடு சிலை உள்ளிட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள இடங்களில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றோம்.
நாங்கள் செய்யும் இப்பணியின் மூலம் மனம் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவதாகவும் இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றங்களுக்கு இந்த காரியம் உதவும் என்ற நம்பிக்கையுடன் இதை செய்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:’கரோனா தொற்றுக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுங்கள்’ குறும்படம் வெளியிட்ட சகோதரிகள்!