ETV Bharat / city

சட்டவிரோத தங்கல்: வங்கதேசத்தைச் சேர்ந்த 2 பேர் கைது - illegal entry in Tamil Nadu

பெருந்துறையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

two-bangladeshi-arrested
two-bangladeshi-arrested
author img

By

Published : Aug 24, 2021, 9:38 AM IST

ஈரோடு: பெருந்துறையில் உள்ள பணிக்கம்பாளையம் கேஸ் குடோன் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு விரைந்த காவலர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் முஜாம்மண்டல், இபாதுல் அலி என்பதும், வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக ரயில் மூலம் இங்கு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் அவர்களுடன் ஜஹங்கர், ஆதாஸ் ஆகிய இரண்டு பேரும் இங்கு வந்து, தற்போது தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டுவரும், சிப்காட் தொழில் வளாகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர் பணிபுரிந்துவருகின்றனர். இவர்களில் சிலர் ஆவணங்களின்றியும், வெளிநாட்டிலிருந்து தப்பிவந்தும் பணிபுரிந்துவருவதாக, அவ்வப்போது புகார்கள் எழுகின்றன.

அதனடிப்படையில், கைது நடவடிக்கையும் நடைபெறுகிறது. இதேபோல, ஒரு வாரத்திற்கு முன்பு வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வங்க தேசத்தில் வன்முறை; காவலர்கள் 26 பேர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.