ஈரோடு: ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவருவதால் தமிழ்நாடு அரசு நோய்ப் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைதோறும் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
இரண்டாவது வாரமாக நாளை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இறைச்சி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் செயல்படாது. மாட்டுப் பொங்கலை அடுத்து ஞாயிற்றுக்கிழமை கரிநாளில் கிராமப்புறங்களில் அசைவு உணவாக இருக்கும்.
ஆனால் நாளை பொதுமுடக்கம் இறைச்சிக் கடைகள் இல்லாத காரணத்தால் சனிக்கிழமை இரவு மக்கள் மீன் வாங்க குவிந்தனர். சத்தியமங்கலம் மீன் கடைகளில் ரோகு கிலோ ரூ.200-க்கும், திலோபி ரூ.150-க்கும் விற்கப்பட்டது.
பவானிசாகர் அணை மீன் விற்பனை நிலையம் மூடப்பட்டதால் தனியார் விற்பனை நிலையங்களில் சனிக்கிழமை மாலை 2 மணி நேரதில் 3 டன் மீன்கள் விற்கப்பட்டதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர். கரோனா விதிகளைப் பின்பற்றி விற்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பு கரும்பில் முறைகேடு? - அரசு கவனிக்குமா...!