ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராமத்துக்குத் தேவையான பால் கொள்முதல் நிலையம், புதிய ஆம்புலன்ஸ் , தங்கும் விடுதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கட்டடங்களைத் திறந்து வைத்த அமைச்சர்கள் 238 பயனாளிகளுக்கு ரூபாய் 4.16 கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் நிலை குறித்து கேட்டபோது, அதற்குப் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
தொடர்ந்து சென்னையில் கரோனா தடுப்பு பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர ஆணையாளர் கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், 'இதுதொடர்பான தகவல்கள் எனது கவனத்திற்கு வரவில்லை, வந்தால் பின்பு ஆலோசிக்கலாம்' என்றார்.