ETV Bharat / city

’2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்’ - தனியரசு எம்.எல்.ஏ.!

ஈரோடு: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

author img

By

Published : Dec 2, 2019, 9:45 PM IST

state assembly election 2021  thaniyarasu mla protest in erode  ஈரோட்டில் தனியரசு எம்எல்ஏ போராட்டம்  தமிழ்நாடு வண்ணார் பேரவை
thaniyarasu mla protest in erode

ஈரோட்டில் வண்ணார் பேரவையின் சார்பில் இடஒதுக்கீடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு பங்கேற்று, நிறைவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடுமையான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

2016ஆம் ஆண்டு அக்டோபரில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சூழ்நிலையிலிருந்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு தற்போது தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கின்றது. மேலும், ஏழு பேர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டும், தடைகோரியும் மனு செய்திருக்கும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்திருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் விதிகளில் அதிரடி மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்தத் தேர்தல் உறுதியாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. பலமுறை ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு மக்களாலும் அரசியல் கட்சிகளாலும் அவர்களின் பிரதிநிதிகளாலும் இத்தேர்தல் வருமா? வராதா என்ற அளவில் வெறுப்பும், கோபமும் வருகிற அளவிற்கு, அதிமுக - திமுக என இரு கட்சிகளும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர் என்ற சந்தேகம் இருக்கின்றது. எனவே 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரை உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் ” என்றார்.

சட்டப்பேரவை உறுப்பினர் தனியரசு பேட்டி

ரஜினி கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”நடிகர்கள் இனி நாடாள முடியாது. அரசியலிலிருந்து ஏற்கனவே பல நடிகர்கள் ஓடிவிட்டார்கள். தமிழ்நாட்டு அரசியலில் ரஜினியும் கமலும் இனி கால் பதிக்க முடியாது. கோடம்பாக்கத்திலிருந்தும் சாலிகிராமத்திலிருந்தும், நடிப்பை தொழிலாக கொண்ட வேடதாரிகள், ஒப்பனைவாதிகளை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்” என்று கூறினார்.

Intro:ஈரோடு ஆனந்த்
டிச02

2021 சட்ட மன்ற தேர்தல் வரை உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் - தனியரசு எம்.எல்.ஏ.!

2021 சட்டமன்ற தேர்தல் வரை உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க
வேண்டும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தனியரசு ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் வண்ணார் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தனியரசு எம்.எல்.ஏ. பங்கேற்றார். பின் செய்தியாளர்களிடம் பேசிய தனியரசு, உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரைக்கும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடுமையான சர்ச்சைகள் இருக்கின்றன.

2016 அக்டோபரில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த சூழ்நிலையில் இருந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்பொழுது வழக்கு நிலுவையில் இருக்கின்றது. ஏழு பேர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டும் தடை கேட்டும் மனு செய்திருக்கும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்திருக்கிறது.

நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்த தேர்தல் உறுதியாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. பலமுறை ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு மக்களாலும் அரசியல் கட்சிகளாலும் அவர்களின் பிரதிநிதிகளாலும் இந்த தேர்தல் வருமா வராதா என்ற அளவில் வெறுப்பும் கோபமும் வருகின்ற அளவிற்கு இதில் அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர் என்ற சந்தேகம் இருக்கின்றது.

ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து 8 கோடி மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய தேர்தலை நடத்த வேண்டும். இதில் சட்டவிதிகளை பின்பற்றி விதிகளுக்கு உட்பட்டு அனைத்து அமைப்புகளையும் சீரமைத்த பிறகு சாதி இட ஒதுக்கீட்டை சரி செய்து அவசரமில்லாமல் அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.

நேர்த்தியாக அறிவிக்கப்பட வேண்டும். வெற்றி தோல்வி ஜனநாயகத்தில் இயல்பு. இதில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். மக்களின் கோரிக்கை வெற்றி பெற வேண்டும் இந்த தேர்தலை நடத்த இது சரியான உகந்த நேரம் அல்ல என்றவர் எதிர்க் கட்சியும் ஆளும் கட்சியும் இந்த தேர்தலில் முறையாக நடக்க 2021 வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். புதிதாக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் வரை உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் தான் ஆரோக்கியமான உள்ளாட்சியை ஏற்படுத்த முடியும். தற்போது இந்தத் தேர்தல் நடக்குமா என்பது தொடர்ந்து கேள்வி குறியாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் இந்த அறிவிப்புக்கு பிறகு பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இது ஒரு குழப்பமான நிலையில் அவசரமாக அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய தேர்தலாக பார்க்கின்றோம். ஏற்கனவே மறைமுக தேர்தல் கூட்டணியில் உள்ள சங்கடத்தை நேர் செய்வதற்கு மறைமுக தேர்தலை அறிவித்தனர்.

பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்படவில்லை இந்த தேர்தல் பல குழப்பங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் விருப்பமில்லாத நேரத்தில் தேர்தல் நடக்கிறது இது ஆரோக்கியமாக நடக்குமா என்று எதிர்பார்க்க முடியாது விருப்பமில்லாத சந்தேகத்தின் அடிப்படையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது ஆரோக்கியமான தேர்தலாக இல்லை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தொடரும் என்றார்.

Body:ரஜினி கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர்கள் இனி நாடாள முடியாது. அரசியலிலிருந்து ஏற்கனவே பல நடிகர்கள் ஓடிவிட்டார்கள். தமிழ்நாட்டு அரசியலில் ரஜினியும் கமலும் இனி கால் பதிக்க முடியாது. தமிழக மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். கோடம்பாக்கத்திலிருந்தும் சாலிகிராமத்தில் இருந்தும் நடிப்பை தொழிலாக கொண்டவர்கள் வேடதாரிகள் ஒப்பனை வாதிகளை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்.

Conclusion:அவர்கள் ஆண் பெண் எந்த நடிகராக இருந்தாலும் திரையரங்குகளில் இருந்து தங்கள் தலைவனையோ நாட்டின் முதலமைச்சரையோ கட்டாயமாக தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் ஒற்றை வாக்கை கூட தமிழ்நாட்டு மக்கள் வழங்கமாட்டார்கள்.
இரண்டு பேரும் இணைந்து சப்பாணி பரட்டை போல பதினாறு வயதினிலே படத்தை போல இணைந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு வாக்கை கூட இருவருக்கும் செலுத்த மாட்டார்கள்.
70வயது நெருங்கிய பிறகுதான் மக்கள் மீது அக்கறை இருப்பதை போல் காட்டிக் கொள்கிறார்கள்.
இந்த சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொண்டு அவர்களை ஏற்க மாட்டார்கள் புறக்கணிப்பார்கள்... என கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.