ETV Bharat / city

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காய மூட்டைகள் தேக்கம் - etvbharat

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு கர்நாடகா மாநில வியாபாரிகள், விவசாயிகள் வராததால் விதை வெங்காயம் விலை குறைந்து 400 மூட்டைகள் தேக்கம் அடைந்தன.

400 விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்
400 விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்
author img

By

Published : Jul 23, 2021, 11:42 AM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் சின்ன வெங்காய விதை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

விதை வெங்காயத்தை வாங்க தாளவாடி மலைப்பகுதி, கர்நாடக மாநிலம் கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (ஜூலை 23) புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 800-க்கும் மேற்பட்ட விதை வெங்காயம் மூட்டைகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

400 விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்
400 விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்

விதை வெங்காயம் விலை குறைவு

கர்நாடக மாநிலத்திலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் இன்று கூடிய வாரச்சந்தைக்கு வரவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக விதை வெங்காயம் கிலோவுக்கு ரூ. 70-க்கு விற்பனையானது.

ஆனால் இன்று விலை குறைந்து கிலோ 35 முதல் 45 ரூபாய் வரை விற்பனையானது. வழக்கமாக சந்தைக்கு கொண்டுவரப்படும் 800 மூட்டைகள் விற்பனையாகும் நிலையில், இன்று சந்தைக்கு கர்நாடக மாநில வியாபாரிகள், விவசாயிகள் வராததால் 400 விதை வெங்காய மூட்டைகள் மட்டுமே விற்பனையானது.

இதில் 400 விதை வெங்காய மூட்டைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'விதை மானியத்தை உடனடியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.