ஈரோடு: பவளத்தாம்பாளையத்தில் காவல் துறையின் வாகனம் மோதி பள்ளி மாணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (15) பெருந்துறை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இன்று (ஜனவரி 13) மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல சாலையில் சென்றுகொண்டிருந்தார். செல்லும் வழியில் பள்ளிக்கு எதிரே உள்ள சாலையைக் கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது கோயமுத்தூரிலிருந்து ஈரோடு ஆயுதப்படை வளாகம் நோக்கி வந்த காவல் துறையின் பாதுகாப்பு வாகனம் கோபாலகிருஷ்ணன் மீது பயங்கரமாக மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட மாணவன் கோபாலகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.