ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். அதோபோல ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த குண்டம் விழா கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்தாண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மார்ச் 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி குண்டம் விழாவும், மார்ச் 28ஆம் தேதி மறுபூஜையும் நடந்துமுடிந்தது.
இந்த விழாவில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், நேற்று (மார்ச் 29) கோயிலின் உதவி ஆணையர் அன்னக்கொடி, துணை ஆணையர் சபர்மதி தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 512 கிராம் தங்கம், 1,931 கிராம் வெள்ளி உள்பட மொத்தம் ரூ.1 கோடியே 29 லட்சம் காணிக்கை கிடைந்துள்ளது.
இதையும் படிங்க: பண்ணாரி கோவிலில் இன்று மறுபூஜை: அரசு பேருந்துகள் ஓடாததால் பக்தர்கள் அவதி