ETV Bharat / city

தமிழ்நாடு பேருந்துகள் கர்நாடகாவிற்குள் செல்வதில் சிக்கல் - Karnataka

கர்நாடக மாநிலத்திற்குள் வரும் தமிழ்நாடு பேருந்துகளுக்கு அம்மாநில அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பேருந்துகள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பேருந்துகள் கர்நாடகாவிற்குள் செல்வதில் சிக்கல்

author img

By

Published : Aug 24, 2021, 10:03 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் நேற்று (ஆக.23) முதல் கர்நாடகம், ஆந்திரா மாநில பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியளித்ததையடுத்து தமிழ்நாடு - கர்நாடகா இடையே தனியார், அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று (ஆக.23) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து மைசூரு, கொல்லேகல், சாம்ராஜ்நகர் சென்ற தமிழ்நாடு பேருந்துகளை, மைசூரு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க மறுத்துள்ளது.

ஆர்டிபிசிஆர் சான்றிதழ் அவசியம்

இதனால், அரசுப் பேருந்துகள் சில மணி நேரம் காத்திருந்ததாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி கர்நாடகவிற்குள் செல்லும் தமிழ்நாடு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் அல்லது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் காண்பிக்க வேண்டும்.

இவ்வாறு நெறிமுறைகளை கடைபிடிக்காத தமிழ்நாடு பேருந்துகள், கர்நாடகாவிற்குள் செல்ல அனுமதிக்க இயலாது என மைசூரு மாவட்ட ஆட்சியர் ரவி உத்தரவிட்டார்.

அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தம்

இதனால், இன்று(ஆக.24) சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்குச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில், பயணித்த பயணிகளிடம் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என நடத்துநர் அறிவுறுத்தினார்.

கர்நாடக அரசின் புதிய உத்தரவால் தமிழ்நாடு பேருந்துகள் கர்நாடகாவிற்குள் தொடர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசின் கெடுபிடியால் கொல்லேகலுக்கு இயக்கப்பட்ட இரண்டு அரசுப் பேருந்துகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தனியார் பேருந்துகள் கொல்லேகல் மாநில எல்லை வரை சென்று திரும்பியது.

கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழ்நாடு வருவதில் எந்தச் சிக்கலும் இல்லாதபோது தமிழ்நாடு பேருந்துகள், கர்நாடகாவிற்குள் பயணிப்பதில் கட்டுப்பாடு விதித்திருப்பது பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.