ஈரோடு மாவட்டம் புதுமை காலனி பகுதியில் உள்ள பழுதடைந்த பழைய கட்டடங்களை இடித்து விட்டு, புதிதாக 464க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை குடியிருப்புவாசிகளிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![erode mla's blocked by people ஈரோட்டில் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் முற்றுகை..! எம்.எல்.ஏ தென்னரசு, எம்.எல்.ஏ ராமலிங்கம் two mla' s blocked](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4177954_erode-1.jpg)
இந்நிலையில், அரசு அலுவலர்களும், ஆளும்கட்சி பிரமுகர்களும் தமிழ்நாடு அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக பணம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு, மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.