ETV Bharat / city

ஆபத்து விளைவிக்கும் காகித ஆலை: ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

ஈரோடு: வெள்ளோடு அருகே தனியார் காகித ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

ஆபத்து விளைவிக்கும் ஆலை
author img

By

Published : Oct 16, 2019, 11:15 PM IST

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே பள்ளபாளையம், குமாரவலசு, சிறுவங்காட்டுவலசு உள்ளிட்ட ஐந்து ஊர்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களுக்கு விவசாயம் ஒன்றே பிரதான தொழிலாக இருக்கிறது.

வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி பேட்டி

இந்நிலையில், பள்ளபாளையத்தில் செயல்பட்டுவரும் தனியார் காகித ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் விவசாய நிலங்களில் விடப்படுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் துர்நாற்றம் வீசுவதாகவும் குடிப்பதற்கேற்றவாறு இருப்பதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்தக் கழிவுநீரால் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாகவும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் புகையினால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படததால் இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்தித்து மனு அளித்ததாகவும் அவர்கள் கூறினர்.

இதையும் படியுங்க:

தனியார் ஆலையில் 510 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஆலைக்குச் சீல் வைப்பு!

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.16

ஆலை கழிவால் நிலத்தடி நீர் பாதிப்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே தனியார் காகித ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Body:ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே பள்ளபாளையம், குமாரவலசு, சிறுவங்காட்டுவலசு உள்ளிட்ட ஐந்து ஊர்கள் உள்ளன. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விவசாயம் ஒன்றே பிரதான தொழிலாக உள்ளது.

இந்நிலையில் பள்ளபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே நிலத்தில் விடப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கழிவால் நோய் தொற்றுகள் ஏற்படுவதாகவும் புகார்
கூறிய பொதுமக்கள் ஆலையில் இருந்து கழிவு நீர் வெளியேற்றுவதை தடுக்க வலியுறுத்தினர்.மேலும்,
தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் புகையினால் சுவாசக் கோளாறு ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் கதிரவனை சந்தித்து மனு அளித்தனர்.

Conclusion:மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் துர்நாற்றம் வீசுவதாகவும் குடிப்பதற்கு முடியாத அளவில் பயனற்று இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.