ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி சோதனை சாவடியில் நேற்று(செப்.09) நள்ளிரவில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடியில் 55 மூட்டைகளில் 1.5 டன் எடையுள்ள குட்கா பொருட்களான ஹான்ஸ் 3,500 பாக்கெட்டுகள், விமல் பான் மசாலா 3 ஆயிரம் பாக்கெட்டுகள், ஆர் எம் டி பான் மசாலா, புகையிலை உள்ளிட்டவை சிக்கின.
இதன் மதிப்பு ரூ. 13 லட்சமாகும். அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(60) என்பவரை கைது செய்தனர். அதோடு சரக்கு வாகனத்தின் பின்னால் வந்த காரில் குட்கா பொருட்களின் உரிமையாளரான பவானி மற்றும் அருண்(35) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (38), ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சேர்ந்த திருப்பதி (32), கடத்தூர் , இந்திரா நகரை சேர்ந்த அசோக்குமார் (35), சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (31) மற்றும் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வஞ்சரவேல் (53) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது