ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டுப்பாளையம்-பஞ்சவெட்டி தோட்டம் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலிருந்து பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் மதுநிஷா(12) தருணிகா(6) என்ற இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று (ஆக.20) நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தீபக் எழுந்து உறவினர்களுடன் தேடிய நிலையில், கீழ்பவானி வாய்கால் ஓரத்தில் தனது இருசக்கரம் வாகனம் நின்று கொண்டிருந்தைக் கண்ட உறவினர்கள் அப்பகுதியில் தேடியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 4 கிமீ தொலைவில் ஆயிபாளையம் என்ற இடத்தில் கரையோரம் உள்ள மரக்கிளையை பிடித்துகொண்டிருந்த மூத்த மகள் மதுநிஷாவை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.
இந்த நிலையில் வாய்க்காலில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நம்பியூர் தீயணைப்புத்துறையினர் சுமார் 7 கிமீ தொலைவில் வேட்டைகாரன்கோவில் அருகே கீழ்பவானி வாய்காலில் மனைவி விஜயலட்சுமியின் உடலை மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உடற்கூராய்வுக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும், வாய்காலில் மாயமான தீபக்கின் 2 வது மகள் தருணிகாவைத் தொடர்ந்து தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘காங்கிரஸ் மீனவ அணி அறிவித்திருக்கும் போராட்டம் ஒரு அரசியல் நாடகம்’ - அமைச்சர் மனோ தங்கராஜ்