ETV Bharat / city

பள்ளிகளின் குடிநீர் தேவையை அவர்களே பூர்த்தி செய்ய வேண்டும் - ON SATHYAMANGALAM

ஈரோடு: மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் தனியார் பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவையை பள்ளி நிர்வாகமே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என புஞ்சை புளியம்பட்டி அரசுப் பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

தனியார் பள்ளிகளின் குடிநீர் தேவையை அவர்களே பூர்த்தி செய்ய வேண்டும்
author img

By

Published : Jun 23, 2019, 7:03 PM IST

புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு 900 மடிக்கணினிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில துளிகள்:

  • நீட் தேர்வுக்குப் பயிற்சி வகுப்பு, அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளக் கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் ஆகிய திட்டங்களைப் பார்த்து உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் பாராட்டியுள்ளார்.
  • இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு வாரங்களில் புதிய பாடத்திட்டப் புத்தகங்கள் வழங்கப்படும்.
  • குவிக் ரெஸ்பான்ஸ் என்று சொல்லக்கூடிய ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசுவதற்கு 2000 சொற்கள் அடங்கிய புதிய மென்பொருள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
  • பள்ளி மாணவர்கள் ஒன்றரை கோடி மரங்கள் நடுவதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்ற வகையில் புதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்காக ஒரு மரத்துக்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • தனியார்ப் பள்ளி நிர்வாகிகள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை வாகனங்கள் மூலம் அவர்களே ஏற்பாடு செய்து கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
  • ரூ.1654 கோடி செலவில் அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதன் மூலம் இப்பகுதி வறட்சி நீங்கி, பசுமையாக மாறும்.
    புளியம்பட்டி அரசுப்பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

Intro:தனியார் பள்ளிகள் மாணவர்களின் குடிநீர் தேவையை பள்ளி நிர்வாகம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
Body:தனியார் பள்ளிகள் மாணவர்களின் குடிநீர் தேவையை பள்ளி நிர்வாகம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதால் தனியார் பள்ளி மாணவர்களின் குடிநீர் தேவையை பள்ளி நிர்வாகமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். டெட் தேர்வில் எத்தனை பேர் எழுதினார்கள் என்பதை கணக்கில் எழுத்துக்கொள்ளமால், காலிப்பணியிடத்திற்கேற்ப நிரப்பிக்கொள்ளப்படும் என சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி அரசுப்பள்ளியில் மடிக்கணினி வழங்கி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இவ்வாறுதெரிவித்தார்.

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி கே வி கே அரசு மேல்நிலைப் பள்ளி,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ல் நடந்த பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே ஏ செங்கோட்டையன், கே சி கருப்பண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு 900 மடிக்கணினி வழங்கினர். அப்போது அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பேசுகையில் இந்தியாவிலேயே மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தில் தான் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 10 லட்சத்து 80 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு, அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளக்கூடிய புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் ஆகிய திட்டங்களை பார்த்து உத்திரப்பிரதேச மாநில துணை முதல்வர் பாராட்டியுள்ளார். அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ஓராண்டு கூட நிறைவேற்ற முடியவில்லை. இதுபோன்ற திட்டங்களை தங்கள் மாநிலத்திலும் நிறைவேற்றுவதற்காக உத்தரப் பிரதேசம் வர அம்மாநில துணை முதல்வர் அழைத்துள்ளார். இன்னும் மூன்று மாதத்தில் 2017 18 ஆம் ஆண்டு படித்த மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும். 2 3 4 5 வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு வாரத்தில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் அதேபோன்று வண்ண சீருடைகள் காலதாமதமானது. 60 நாட்கள் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் சீருடையில் வழங்க இயலவில்லை அடுத்த வாரம் வண்ணச் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவிக் ரெஸ்பான்ஸ் என்று சொல்லக்கூடிய ஆங்கிலத்தை சரளமாக பேசுவதற்கு 2000 சொற்கள் அடங்கிய புதிய சாப்ட்வேர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் ஒன்றரை கோடி மரங்கள் நடுவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு நடைமுறை படுத்த உள்ளது. இதற்காக ஒரு மரத்துக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் .இயற்கை வெப்பநிலை ஆண்டுக்காண்டு மாறுவதற்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது இதுகுறித்து அமைச்சரவையில் கலந்து பேசி விரைவில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும்.டெட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வேலை வழங்க இயலாது. காலிபணியிடத்திற்கேற்ப தேவையான ஆசிரியர்களை மட்டுமே தேர்வு செய்து கொள்வோம். தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்களுக்கு தேவையான தண்ணீரை வாகனங்கள் மூலம் அவர்களே ஏற்பாடு செய்து கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ரூ.1654 கோடி செல்வில் அவினாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேறுகிறது. இதன் மூலம் இப்பகுதி வறட்சி நீங்கி, பசுமையாக மாறும் என்றார்.

பேட்டி: கே.ஏ.செங்கோட்டையன், கல்விஅமைச்சர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.