ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதேபோல் டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கிராமப்புற பகுதிகளாக இருப்பதாலும், இங்குள்ள மாணவர்கள் அரசு போட்டி தேர்விற்கு உரிய வழிகாட்டுதல், புத்தகங்கள் இல்லாத நிலையில் போட்டி தேர்விற்கு தேவையான புத்தகங்கள், இணையதள வசதியுடன் கூடிய கலைஞர் படிப்பகமும் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
![கலைஞர் படிப்பக திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-02-sat-minister-muthu-vis-tn10009-x264_19082022150759_1908f_1660901879_995.jpg)
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ சிலை, படிப்பகத்தை வரும் 26 ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: ஆவடி சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - நலம் விசாரித்த அமைச்சர்