ஈரோடு மாவட்டம் சித்தோடு சமத்துவபுரம் பகுதியில் சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நள்ளிரவில் தனியாருக்கு சொந்தமான பயன்படுத்தாத காலி நிலத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் லாரியில் கொண்டு வரப்பட்ட சாய திடக்கழிவுகளை கொட்டிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் எந்த ஆலையில் இருந்து கொண்டுவரப்பட்ட சாய கழிவுகள் இடத்தின் உரிமையாளர் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிக போக்குவரத்து நிறைந்த தேசிய நெடுஞ்சாலை அருகே சாயக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.