ETV Bharat / city

ஈரோட்டில் அண்ணனை கொலை செய்த தம்பி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - ஈரோட்டில் அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி

ஈரோட்டில் தகராறு காரணமாக, அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பியை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Jun 8, 2022, 3:42 PM IST

ஈரோடு: சூரம்பட்டியில் உள்ள உணவகம் ஒன்றில் திருப்பத்தூரை சேர்ந்த அருண் பாண்டியன் (32) என்பவர் தங்கி பணியாற்றி வந்தார். இன்று (ஜுன். 8) அதிகாலையில் அருண் பாண்டியனுக்கும் அவரது தம்பி அஜீத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அத்திரமடைந்த தம்பி அஜீத் அண்ணனை மொசுவண்ண வீதியில் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி கொலை செய்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில், ஈரோடு மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் தலைமையிலான காவல் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் உயிரிழந்தவரின் தம்பியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சி

அண்ணன் அருண் பாண்டியனை அவரது தம்பி துரத்திச் சென்று சரமாரியாக வெட்டும் காட்சி அங்குள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.30.13 லட்சம் தங்கம், எலக்ட்ரானிக் பொருள்கள் கடத்தல் - விமான பயணி கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.