ETV Bharat / city

Lorry drivers starving: பண்ணாரி சோதனைச்சாவடியில் உணவின்றித் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள் - Lorry drivers starving

Lorry drivers starving: தமிழ்நாடு-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனை சாவடியில் சரக்கு லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், உண்ண உணவின்றித் தவித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பண்ணாரி சோதனைச்சாவடியில் உணவின்றி தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்

author img

By

Published : Jan 9, 2022, 7:28 PM IST

Lorry drivers starving: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் சரக்கு லாரிகளை, பண்ணாரி சோதனைச்சாவடி காவல் துறையினர் முழு ஊரடங்கு காரணமாக தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக இரு மாநில எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று உள்ளன.

பண்ணாரி சோதனைச்சாவடியில் உணவின்றித் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்

சரக்கு லாரியை இயக்கும் ஓட்டுநர்கள் லாரிகள் செல்ல அனுமதிக்காததால் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் ஹோட்டல், டீக்கடை ஏதும் இல்லாததால் ஓட்டுநர்கள் உண்ண உணவின்றித் தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

காய்கறி, பால், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களை அனுமதிப்பதுபோல் மற்றும் சரக்கு லாரிகளையும் இயக்க அனுமதி வழங்கவேண்டுமென ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் சரக்கு லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு காரணமாக நேற்று ஒரே நாளில் எத்தனை கோடிக்கு மதுவிற்பனை நடந்தது தெரியுமா?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.