கோபிசெட்டிபாளையம் நஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இந்நிலையில் நேற்று முன் தினம்(ஜன.29) வழக்கம் போல் தனது ஆடு மற்றும் சேவலை வீட்டின் முன் கட்டி வைத்து விட்டு சரவணன் உறங்க சென்றுள்ளார்.
நேற்று காலை(ஜன.30) ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல சென்று பார்த்த போது, 4 ஆடுகள் மற்றும் ஒரு சேவலை சிறுத்தை கடித்து கொன்று இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறை மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை மற்றும் காவல்துறையினர் இறந்து கிடந்த ஆடுகளை ஆய்வு செய்தனர். அவை சிறுத்தையால் கொல்லப்பட்டது உறுதியானது.
மேலும் சிறுத்தை தாக்கியதில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
சிறுத்தை கிராமப்புறங்களில் பதுங்கியிருப்பதாகவும் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வெயிலோடு விளையாடுவோம்' - சூரிய வெளிச்சத்தின் நன்மைகள்