ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை பூக்கள் உற்பத்தி நடக்கின்றன. தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து நாளொன்று 6 டன்னில் இருந்து 3 டன்னாக குறைந்துள்ளது. அதேநேரத்தில சுபமுகூர்த்த தினம், ஓணம் பண்டிகை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ.650-க்கு விற்கப்பட்ட பூக்களின் விலை இரு தினங்களாக கிலோ ரூ.2 ஆயிரத்தை எட்டியது. பூக்களை ஏலம் எடுப்பதில் உள்ளூர் வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
சத்தியமங்கலத்தில் விளையும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் இங்கு கொள்முதல் செய்யப்படும் பூக்கள் மும்பை, திருவனந்தபுரம், கர்நாடகாவுக்கு அனுப்பப்படுகின்றன. முகூர்த்த விஷேசங்களுக்கு மணமக்கள் திருமண மாலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு மாலை குறைந்த பட்சமாக ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் விற்கப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மோடி படம் எங்கே..? கேள்வி கேட்ட நிர்மலா சீதாராமன்... கிண்டல் அடித்த தெலங்கானா அமைச்சர்...