ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து ஆண்டுதோறும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நெல் பயிரிட குறுவை சாகுபடிக்கு நீர் திறப்பது வழக்கம்.
அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகு பாசன பகுதியிலுள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் நீர் திறக்கப்படவுள்ளது.
இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இந்நிலையில் நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்களை இருப்பு வைக்கும் பணி சத்தியமங்கலம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உரங்கள் இருப்பு
இதற்கான உர தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் உர மூட்டைகள் தனியார் உரக்கிடங்குகளில் இறக்கி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உரக்கிடங்குகளிலும் கீழ்பவானி பாசன பகுதிகளில் விவசாயிக்கு தேவையான யூரியா, பொட்டாசியம், டிஏபி உள்ளிட்ட பல்வேறு வகையான உரங்கள் மத்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு: மின்கம்பங்களை அகற்ற உத்தரவு!'