ஈரோட்டில் ஆர்.ஆர். துளசி பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான கட்டுமான பணிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று கோவையிலிருந்து வந்த வருமானவரித்துறை அலுவலர்கள் 20க்கும் மேற்பட்டோர், மூன்று குழுக்களாக பிரிந்து கட்டுமான நிறுவன அலுவலகம், அந்நிறுவனத்துக்கு சொந்தமான திருமண மண்டபம், டிராவல்ஸ் ஆகிய அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.