ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கல்வெட்டுபாளையம் பகுதியைச்சேர்ந்த விவசாயி கந்தசாமி, தனது தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது தோட்டத்தில் நேற்று இரவு அவற்றை வழக்கம்போல் அடைத்து விட்டுச்சென்றார்.
மீண்டும் விவசாயி, இன்று (ஆக.10) அதிகாலை தோட்டத்தில் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். தோட்டத்தில் இருந்த 8 ஆடுகள், 3 கோழிகள் உயிரிழந்து கிடந்தன. அவற்றை ஏதோ விலங்கொன்று கடித்து குதறியதாகத் தெரிய வருகிறது.
இதனையடுத்து தகவலறிந்த வனத்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஆடுகள், கோழிகளின் மதிப்பு 1.30 லட்சம் இருக்கும் என்றும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயி கந்தசாமி கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 7 முறை மனு கொடுத்த 90 வயது கன்னியம்மாள் பாட்டி - கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?