ஈரோடு: சத்தியமங்கலத்தில் பழங்குடி மாணவர்கள், இளைஞர்களுக்கு அரசு வேலை பெறுவதற்கான வழிகாட்டி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர்(ஐஜி) ஆர்.சுதாகர் தலைமை தாங்கினார்.
காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஐஜி சுதாகர், "படிக்கும் காலத்தில் இரவு நேர சாப்பாடு கூட இல்லாமல் வறுமையில் வாடினேன். அதை பொருட்படுத்தாது நன்கு படித்து ஐபிஎஸ் ஆகி இன்று உயர் பதவியில் இருக்கிறேன். நீங்களும் என்னைப் போன்ற பின்தங்கிய சமுதாய மாணவர்கள் என்பதால் படித்து முன்னேற வேண்டும்.
இளைஞர்கள் படித்து மலை கிராமத்தை மேம்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும்" என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலமலை, தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வியாபாரி கொலை வழக்கு: காவலரிடம் தொடர் விசாரணை!