ETV Bharat / city

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் - தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம்

புதுக்கோட்டை: குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

grama saba
grama saba
author img

By

Published : Jan 26, 2020, 11:06 PM IST

குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பார்வையாளராகக் கலந்துகொண்டார்.

கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்
கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், 'கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலைவசதி, குடிநீர்வசதி, சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 30 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அதில் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க 2 வார காலத்தில் நிர்வாக அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை ஆக்கிரமிப்புகளில் உடனடி நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

ஈரோடு

ஈரோடு 46 புதூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ சுப்பிரமணி, அரசுத் துறை அலுவலர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் எனப் பலர் கொண்டனர்.

கிராம சபைக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் தொழுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல் கூட்டம் என்ற அடிப்படையில் தங்கள் பகுதிக்குத் தேவையான, தேவையற்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: காவலர்களைத் தாக்கி மொட்டையடித்த நால்வர் கைது!

Intro:Body:
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டு பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் பேச்சு.

குடியரசு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி பார்வையாளராக கலந்து கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது.
அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் ஜனவரி -26 குடியரசு தினம், மே-1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் -15 சுதந்திர தினம், அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்றைய தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்;மேலாண்மை இயக்கம் குடிமராமரத்து, குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் 2020-21 பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்-2 உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக இந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலைவசதி, குடிநீர்வசதி, சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 30 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க 2 வார காலத்தில் நிர்வாக அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக எடுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்.உமாமகேஸ்வரி பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லலிதா, வேளாண் இணை இயக்குநர் (பொ) பெரியசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலமுரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வன், ஒன்றியக் குழுத்தலைவர் சின்னையா, ஊராட்சிமன்ற தலைவர் பாபு, ஊராட்சிமன்ற துணைத்தலைவர் நந்தகுமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.