புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஐந்து மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் நேராக வி.ஆர்.டி. மில் அருகே தனியார் விவசாய தோட்டத்திற்குச் சொந்தமான 50 அடி ஆழ கிணற்றில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர்.
இதில் அன்பு கண்ணனுக்கு நீச்சல் தெரியாததால் அவன் ஒருவனைத் தவிர மற்ற நான்கு பேரும் கிணற்றில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது ஆர்வமிகுதியால் அன்பு கண்ணன் திடீரென கிணற்றில் குதித்துள்ளார்.
நீச்சல் தெரியாததால் அன்பு கண்ணன் கிணற்று நீரில் மூழ்கி மாயமானதைக் கண்ட மற்ற நான்கு மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கும், புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கிணற்று நீரில் இறங்கி மாயமான மாணவனின் உடலைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: திருமண பந்தத்தை மீறிய உறவு: திமுக பிரமுகர் கொலை