ETV Bharat / city

108 அவசர ஊர்தியில் பிறந்த ஆண் குழந்தை! - ambulance birth

கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வலி அதிகமானதையடுத்து வழியிலேயே வாகனம் நிறுத்தப்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ambulance birth
ambulance birth
author img

By

Published : Aug 1, 2020, 8:25 PM IST

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் 108 அவசர ஊர்தியில் வைத்து பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த பைனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாதேவா. இவரது மனைவி ஜெயம்மா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 31) காலை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைகாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 அவசர ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஓட்டுநராக சித்தராஜும், மருத்துவராக ரங்கசாமியும் பணியில் இருந்தனர். திம்பம் மலைப்பாதை 19 கொண்டை ஊசி வளைவில் அடர்ந்த வனப்பகுதியில் வாகனம் செல்லும் போது, பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானது.

சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற 4 சிறுவர்கள் கைது!

பின்னர், சாலை ஓரத்தில் வாகனம் நிறுத்தப்பட்டு, கர்ப்பணிக்கு மருத்துவர் ரங்கசாமியால் பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தப்போது தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.