ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்றரை ஆண்டுகள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன். தற்போது கரோனா தொற்று பரவல் குறைந்துவருவதால் தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதற்காக வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
அப்படி பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து நேற்று(செப்.13) ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் பள்ளியில் அவர்களுடன் தொடர்பிலிருந்த 220 மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட 37 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று(செப்.14) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து மாநிலத்தில் மொத்தம் 83 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக அளவில் மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்கள் பள்ளிக்குவர கட்டாயமில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு: 83 மாணவர்களுக்கு கரோனா