ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் திகினாரை, தொட்டகாஜனூர், தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், கல்மண்டிபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. 3 மாதப் பயிரான மக்காச்சோளம் ஒரு மாதப்பயிரான வளர்ந்துள்ளது.
தற்போது பயிர் வளர்ச்சிக்கும் மகசூல் கிடைக்கவும் யூரியாவின் பங்கு முக்கியமானதாக இருப்பதால் யூரியா கேட்டு இன்று (அக்.05) விவசாயிகள் தாளவாடி தொடக்க வேளாண் வங்கி முன் திரண்டு வந்தனர். ஒரு மாத காலமாக யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்படவில்லை.
யூரியா பற்றாக்குறை
இந்நிலையில், இன்று தாளவாடி கூட்டுறவு வங்கிக்கு 150 மூட்டைகள் மட்டுமே வந்தது. இதனால் யூரியா வழங்கப்படுவதாக தாளவாடி வேளாண் கூட்டுறவு வங்கி அறிவித்தால் வங்கி முன் கூடிய விவசாயிகள் கேட்டை திறந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
ஆனால், 150 பேருக்கு மட்டுமே வழங்குவதால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏமாற்றத்துடன் இருந்தனர். ஒரு ஏக்கர் மக்காச்சோளத்திற்கு 2 மூட்டைகள் யூரியா போட்டால் மட்டுமே பயிர் வளர்ச்சியடைய உதவும். ஆனால், ஒரு நபருக்கு ஒரு மூட்டை யூரியா வழங்குவதால் பற்றாக்குறையாக உள்ளதாகவும், யூரியா கிடைக்காமல் போனால் மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாயில் வேண்டுகோள்
யூரியா மூட்டைகள் இல்லையென தெரிவித்தும்கூட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் யூரியா கேட்டு தாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு காத்து கிடக்கின்றனர். அதிக விலை கொடுத்து தனியார் உரக்கடையில் வாங்காமல் இருந்த விவசாயிகள் ஒரு கட்டத்தில் உரக்கடைக்கு சென்றாலும் அங்கு யூரியா இருப்பதில்லை.
இதனால், மக்காச்சோளம் மகசூல் கேள்விக்குறியாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், விவசாயி ஒருவருக்கு ஆறு மூட்டைகள் உரம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேச வன்முறை: 18 பேர் கைது