ETV Bharat / city

2 விவசாயிகளுக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறால் நேர்ந்த விபரீதம்!

ஈரோடு: இரு விவசாயிகளிடையே ஏற்பட்ட நிலத்தகராறில், ஒருவர் மற்றொருவரின் எருமை மாட்டின் கண்ணை காயப்படுத்தியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட எருமையின் விவசாயி நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

சண்டையில் எருமை கண்ணை காயப்படுத்திய விவசாயி!
author img

By

Published : Jun 11, 2019, 9:20 AM IST

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அருகே உள்ள செங்கோடம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயியான இவருக்கு நாராக்காட்டு தோட்டம் என்ற இடத்தில் ஆறு ஏக்கர் நிலம் உள்ளது. பொன்னுசாமிக்கு நான்கு எருமைகள் உள்ளன.

அனுதினமும் இந்த நான்கு எருமைகளை வளர்த்துவரும் பொன்னுசாமி அதன் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்து பிழைப்பு நடத்திவந்துள்ளார்.

இவரது தோட்டத்தின் அருகே உள்ள அவர் உறவினர் செல்வராஜ் என்பவரின் தோட்டத்தின் இடையே உள்ள பாதைவழி யாருக்கு என்ற பிரச்னை கடந்த சில வருடங்களாக இருந்து வந்துள்ளது.

இதனிடையே மே மாதம் பொன்னுசாமி ஊரில் இல்லாத நேரத்தில், பாதைவழி தொடர்பாக செல்வராஜ் பொன்னுசாமியின் குடும்பத்திடம் தகராறில் ஈடுபட்டு, சிலரை தாக்கி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த பொன்னுசாமியின் தாயார் வள்ளியம்மாள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்தச் சம்பவத்தின்போது, பொன்னுசாமியின் எருமை ஒன்றின் கண்ணில் இரும்புக் கம்பியைக் கொண்டு செல்வராஜ் ஈவு இரக்கமின்றி குத்தினார். இதனால், எருமை வலி தாங்கமுடியாமல் மரண ஓலமிட்டது. இந்தத் தாக்குதலில் எருமையின் ஒரு கண் முழுவதும் பறிபோய்விட்டது.

பாதிக்கப்பட்ட எருமை மாட்டின் விவசாயி பொன்னுசாமி

கடும் வலியால் அவதிப்பட்டுவரும் எருமை உணவு உட்கொள்ள முடியாமல் சிரமப்பட்டுவருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.

ஈரோடு 10.06.2019
சதாசிவம்.

நிலத்தகராறில் விவசாயிகளிடையே ஏற்பட்ட சண்டையில் தனது எருமையின் மாட்டிற்கு கண் பறிபோனதற்கு நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயின் சம்பவம் அங்கு இருந்த அனைவருக்கும் பரிதபாத்தை ஏற்படுத்தியது..

   ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் அருகே உள்ள செங்கோடம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி..விவசாயியான இவருக்கு நாராக்காட்டு தோட்டம் என்ற இடத்தில் 6ஏக்கர் தோட்டம் உள்ளது..மேலும் தனது அன்றாட தேவைகளுக்காக பொன்னுசாமி 4 எறுமை மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வருகிறார்.இந்நிலையில் இவரது தோட்டத்தின் அருகே உள்ள மற்றொரு தோட்டத்தின் உரிமையாளரும் உறவினருமான செல்வராஜ் என்பவருடன் கடந்த சில வருடங்களாக பாதைவிடுவது தொடர்பாக தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது..இதனிடையே கடந்த மாதம் பொன்னுசாமி ஊரில் இல்லாத நேரத்தில் தகறாரில் ஈடுபட்ட செல்வராஜ் குடும்பத்தினர், பொன்னுசாமியின் குடும்பத்தினரையும், அவரது உறவினர்கள் சிலரையும் தாக்கியுள்ளனர்..இதில் படுகாயமடைந்த பொன்னுசாமியின் தாயார் வள்ளியம்மாள் கோவையில் தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்..இந்த மோதல் சம்பவத்தின் போது, பொன்னுசாமியின் எறுமை மாடு ஒன்றின் கண்ணில் இரும்பு கம்பியால் தாக்கியதில் மாட்டிற்கு ஒரு கண் முழுவதும் பறிபோய் விட்டது.இதனால் உணவு உட்கொள்ள முடியாமல் மாடு அலறியபடியே உள்ளது..இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.

 Visual send mojo app
FILE NAME:TN_ERD_03_10_FARMER_DEMAND_VISUAL_7204339.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.