ETV Bharat / city

சத்தியமங்கலம் நகராட்சியில் 100 நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு - அடையாளம் காண தலையில் நீல வர்ணம் பூச்சு! - தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சத்தியமங்கலம் நகராட்சி கால்நடைத்துறை அலுவலர்களின் உதவியோடு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

குடும்பக் கட்டுப்பாடு
குடும்பக் கட்டுப்பாடு
author img

By

Published : May 4, 2022, 9:25 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தன. தெரு நாய்கள் சாலைகளில் செல்வோரை துரத்துவது, கடிப்பது, வாகனத்தின் குறுக்கே சென்று விபத்து ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் நகராட்சியின் மூலம் சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அலுவலர்களின் அறிவுரையின் பேரில், இன்று (மே 04) நகர்ப் பகுதியில் சுற்றித்திரிந்த 100 தெரு நாய்களை பிடித்து வேனில் ஏற்றி மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு சென்று நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டு பின்னர் நாய்கள் பிடிக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் கொண்டுவந்து விடப்பட்டது.

குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்ட நாய்களுக்கு தலைப்பகுதியில் நீல நிற வர்ணம் பூசப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நாய்கள் பிடிக்கப்பட்டு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதால், தற்போது நாய்கள் தொல்லை குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் புலிகள் சரணாலய சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை தொடரும் - உயர் நீதிமன்றம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.