ஈரோடு: திருப்பூர் அருகே போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் 2018ஆம் ஆண்டு சத்தியமங்கலம், பங்களாபுதூர் பகுதியில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயன்ற போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு நிலுவையிலிருந்த போது, அவர் தலைமறைவாகிவிட்டார். மேலும் 2019ஆம் ஆண்டு ஈரோடு சூரம்பட்டி, டீச்சர்ஸ் காலணி பகுதியில் ஒரு பெட்ரோல் பங்கில் 2000 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் விட முயன்ற சலாம் என்பவரையும், 2021ஆம் ஆண்டு அவரோடு தொடர்புடைய ராஜா (எ) ஷேக்மைதீன் என்பவரையும் ஈரோடு காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தலைமறைவு குற்றவாளி சதீஷ் இவர்களுக்குக் கள்ள நோட்டுகளை வழங்கி வந்தது தெரியவந்தது. இதேபோல, பலருக்கும் சதீஷ் கள்ள நோட்டுகளை வழங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் அவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் தலைமறைவு குற்றவாளி சதீஷ் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:சேலத்தில் நீதிபதிக்கு கத்திக்குத்து - உதவியாளர் கைது