ஈரோடு: சத்தியமங்கலம் தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா நடைபெறும், அதே போல் இந்த ஆண்டும் நேற்று கணபதி பூஜையுடன் திருவிழா தொடங்கியது.
சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜையும் அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. ரங்சாமி, மல்லிகார்ஜுனா சுவாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கபட்டு திகனாரை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தன.
அதனைத் தொடர்ந்து நீர் நிறைந்த தெப்ப குளத்தில் வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி சப்பரம் குளத்தின் நடுபகுதிக்கு சுமந்து சென்று மூன்று முறை வலம் வந்தனர். விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாதாரணை நடைபெற்றது.
பக்தர்கள் சுவாமிக்கு பூக்கள் வைத்தும் தேங்காய் உடைத்தும் தரிசனம் செய்தனர். தெப்பதிருவிழாவிற்கு குறைந்த அளவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் விழாவையொட்டி தாளவாடி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: தி.நகரில் காவல் துறை புதிய வியூகம் - நகைத் திருட்டுக்கு வாய்ப்பே இல்லை