ஈரோடு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, “நாளை முழு ஊரடங்கில் அநாவசியமாக வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ தேவைகள், இறுதி சடங்கு தவிர வெளியில் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
நகரின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்படும். மளிகை காய்கறி கடைகள் திறக்க அனுமதியில்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு கட்டாயம்” என்று கூறினார்.