ஈரோடு: சுதந்திரப் போராட்டத் தியாகி கொடிகாத்த குமரனின் 118ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கொடிகாத்த குமரனை கௌரவிக்கும் வகையில், ஈரோடு மாநகர்ப்பகுதியின் முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான சம்பத் நகர் சாலைக்கு "தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்" எனப் புதிதாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
பெயர்ப் பலகையைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்
இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி , கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவேரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரூ. 5ஆயிரம் ஊக்கத்தொகை திட்டத்தை நாளை தொடங்கிவைக்கும் முதலமைச்சர்