மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டத் திருத்தைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சத்தியமங்கலம் பூ விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சத்தியமங்கலத்தில் இன்று (டிச. 08) பூவை பறிக்காமல் செடியிலேயே விட்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பூச்சந்தை மூடப்பட்டது. சத்தியமங்கலம் அடுத்த மைசூரு தேசிய நெடுஞ்சாலை கோம்பு பள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மல்லிகைப்பூவை சாலையில் கொட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் கோஷமிட்டனர்.
இதையும் படிங்க: அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு?