ETV Bharat / city

சாலையின் நடுவே ஜாலியாக உலாவரும் யானை; வாகன ஓட்டிகள் பீதி!

ஈரோடு: ஆசனூர் சாலையில் மரக்கிளைகளை சாப்பிட வந்த காட்டு யானை அங்கேயே சுற்றித்திரிந்ததால், வாகன ஓட்டிகள் சாலையை கடப்பதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

elephant roams in road
author img

By

Published : Jul 29, 2019, 10:20 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் வனப்பகுதியின் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. அந்த அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் தமிழ்நாடு-கர்நாடக இடையே மைசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனகள் வந்துசெல்கின்றன.

காட்டு யானைகள் தீவனம், குடிநீர் தேடி அப்பகுதியில் முகாமிட்டுவருவது வழக்கம். இந்நிலையில் ஆண் யானை ஒன்று ஆசனூர் சாலையோரத்திலிருந்த மரக்கிளைகளை முறித்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் அங்கு நின்று கொண்டிருந்தது.

இதனால் சாலையை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஆனால் யானை சாப்பிட்டுவிட்டு சாலையில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் யானையை விரட்ட தங்கள் இருசக்கர வாகனம் மூலம் ஒலியெழுப்பியுள்ளனர்.

இதில் மிரண்ட யானை வாகனங்களை நோக்கி வந்ததால், மக்கள் அதற்கு அஞ்சி வாகனங்களை வந்த திசையிலேயே பின்னோக்கி ஓட்டிச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வனத் துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து யானையை காட்டுக்குள் விரட்டிய பின் யானைகள் சாலையோரம் நடமாடுவதால் அவைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என வனத் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.

சாலையின் நடுவே சுற்றித்திரிந்த யானை; வாகன ஓட்டிகள் சிரமம்!

Intro:Body:ஆசனூர் சாலையில் திரியும் ஒற்றையானை: காட்டுக்குள் செல்ல மறுத்து அடம் பிடித்த ஆண்யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

ஆசனூர் சாலையில் திரியும் ஒற்றையானையானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அச்சுறுத்தும் யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் தமிழகம் கர்நாடக இடையே மைசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிகள் பயணிக்கின்றன. காட்டுயானைகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி ஆசனூர் சாலையில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், ஆசனூர் சாலையில் ஒற்றை ஆண்யானை சாலையோரம் நின்று மரக்கிளைகளை முறித்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது. இந்த ஒற்றை யானை வாகன ஓட்டிகளை துரத்துவதால் அது காட்டுக்குள் செல்லும் வரை இரு சக்கர வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். ஆனால் யானை நீண்ட நேரம் அங்கும் இங்குமாக சாலையில் சுற்றித் திரிந்தது. வாகனங்களின் ஹாரம் சப்தத்துக்கும் அடங்காத யானை காட்டுக்குள் செல்லாமல் அடம் பிடித்தது. யானையின் அச்சுறுத்தல் காரணமாக கார், வேன் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டன. வாகனத்தை நோக்கி யானை வருவதை பார்த்து வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி சென்றன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டினர். யானைகள் சாலையோரம் நடமாடுவதால் அவைகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.