ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே மாதத்தில் மூன்று யானைகள் நோயால் உயிரிழந்தன.
இந்நிலையில், கடம்பூர் வனத்துறையினர் குரும்பூர் காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 9 வயதுள்ள ஆண்யானை உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு வந்த கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவகுழு யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.
அதில், யானை கால்தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அதன் உடல் அதே இடத்தில் பிற விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது.
இதையும் படிங்க: ஏரிகளில் குடிமராமத்து பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு