ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தலைமலை, விளாமுண்டி, கடம்பூர், டி.என்.பாளையம், கேர்மாளம், தாளவாடி, ஜீரஹள்ளி, ஆசனூர் என 10 வனசரகங்கள் இந்த புலிகள் காப்பகத்திலுள்ளன. மேலும், யானைகளின் புகலிடமாக திகழ்கிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.
கேரள வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் தெங்குமரஹாடா வனத்தில் தங்கி முதுமலை வழியாக கர்நாடக மாநிலம் முத்தங்கா வனத்தில் சென்றடைகின்றன. இங்கு யானைகள் குடும்பம் குடும்பமாக இடம்பெயருகின்றன. கேரள வனத்தில் இருந்து வரும் யானைகள் தெங்குமரஹாடாவில் முகாமிட முக்கிய காரணமாக மாயாறு உள்ளது.
![யானைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8396645_404_8396645_1597484255348.png)
மாயாற்றில் யானைகள் குளித்தும் கும்மாளமிடுவதும் கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சியாக அமையும். யானைகள் கருவுறுவதற்கு 22 மாதங்கள் என கணக்கிட்டாலும் பல பெண் யானைகள் அக்கூட்டத்தில் பல குட்டிகளை ஈனுகின்றன. யானைகள் உடல்நலக்குறைவால் இறப்பு, வேட்டையாடுதல், குடற்புழு நோயால் உயிரிழப்பு என கணிக்கிட்டாலும் அதன் இனப்பெருக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
![யானைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8396645_594_8396645_1597484269428.png)
தலைமலை, ஆசனூர் பகுதியில் யானைகள் குட்டிகளுடன் உலாவுவதை காணமுடியும். ஒவ்வொரு கூட்டத்திலும் யானைக்குட்டிகள் இருக்கும். கோவை வனப்பகுதியில் போதிய தீவனம் இல்லாததால் நஞ்சு செடிகளை சாப்பிடுவதால் யானைகள் அடிக்கடி உயிரிழக்கின்றன. யானைகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு அது குறித்து ஆய்வுசெய்ய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
![யானைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8396645_740_8396645_1597484290576.png)
வேட்டைத்தடுப்பு காவலர்கள், வனக்குழு ஆகியோர் தீவிர ரோந்து காரணமாக யானைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆறு மாதத்தில் நோய் பாதித்தும், மின்வேலியில் சிக்கியும் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் 6 யானைகள் உயிரிழந்தன. தற்போது ஆசனூர் வனத்தில் செடிகள் துளிர்விடுவதால் அதனை சாப்பிட யானைகள் சாலையோரம் முகாமிட்டுள்ளன.
![யானைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8396645_144_8396645_1597484305912.png)
வனக்குட்டைகளில் தண்ணீர் நிரப்பி சுகாதாரமான தண்ணீர் ஊற்றி யானைகளின் தாகத்தை வனத்துறை தீர்த்து வருகிறது. காடுகள் செழிப்பாக இருக்க அதிகளவில் யானைகள் இருப்பதே காரணம். யானைகள் இல்லையெனில் கால்நடை மேய்ச்சலால் காடுகளின் வளம் குறைந்து மழையில்லாமல் போகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டுமே 1100 யானைகள் இருப்பதாக அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் தெரியவந்தது.