தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கி ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் பன்வாரிலால் முதலமைச்சராக ஸ்டாலினை பதவியேற்க அழைப்பு விடுத்தார். அதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று (மே.7) காலை 9 மணிக்கு எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்து, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதையும் படிங்க: முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!